Homeசெய்திகள்சினிமாஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்.... யார் தெரியுமா?

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்…. யார் தெரியுமா?

-

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய். இவர் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதை தொடர்ந்து. தனது 69ஆவது படத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறார் விஜய். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்.... யார் தெரியுமா?இந்நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் அதனை தவிர்த்து விட்டு இயக்குனராக வேண்டும் என்ற விருப்பத்தில் தற்போது புதிய கதை ஒன்றினை தயார் செய்துள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்? யார் ஹீரோயின்? என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்படி நடிகர் கவின் தான் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்.... யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் ஜேசன் சஞ்சய் உடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். ஆகையால் இந்த படத்தை முடித்துவிட்டு துருவ் விக்ரம், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ