Homeசெய்திகள்சினிமாசில்லுக் கருப்பட்டி இயக்குனரின் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மானின் மகள்!

சில்லுக் கருப்பட்டி இயக்குனரின் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மானின் மகள்!

-

- Advertisement -

ஏஆர் ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்ல இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி உலகளவிலும் தன்னை முன்னிறுத்தியுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

ஏஆர் ரஹ்மானுக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா என்ற இரு மகள்களும் மற்றும் அமீன் என்ற மகனும் இருக்கின்றார்கள்.

ஏற்கனவே ஏஆர் அமீன் படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். தற்போது இசையமைக்கவும் தொடங்கியுள்ளார். மேலும் பல மேடைகளில் ஏஆர் ரஹ்மான் தங்கள் மகள்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் குடும்பத்தில் இருந்து மற்றுமொரு இசையமைப்பாளர் உருவாக்கியுள்ளார். ஆம், அவரின் மூத்த மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

சில்லுக் கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் ‘மின்மினி’ படத்தின் மூலம் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

மின்மினி படத்திற்காக கதீஜா ரஹ்மான் என்ற இந்த அபார திறமையுடன் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. அருமையான பாடகி மற்றும் ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட. பல சிறந்த இசை நடந்து கொண்டிருக்கிறது!” என்று இயக்குனர் ஹலிதா தெரிவித்துள்ளார்.

MUST READ