நடிகர் ராம்சரண் , ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராம்சரண், எஸ்.ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ராம் சரணின் 15 வது படமான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமிழ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் ராம்சரண் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தை பட குழுவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.
அதேசமயம் இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற மார்ச் 27ஆம் தேதி ராம்சரணனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஜரகண்டி எனும் முதல் பாடல் வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த பாடல் வெளியாகாமல் போனது குறிப்பிடத்தக்கது. எனவே அதிருப்தியில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -