spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎங்களைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் .... 'கங்குவா' பட ப்ரோமோஷனில் சூர்யா!

எங்களைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் …. ‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு முன்னதாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் .... 'கங்குவா' பட ப்ரோமோஷனில் சூர்யா!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் .... 'கங்குவா' பட ப்ரோமோஷனில் சூர்யா!3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் எந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எங்களைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் .... 'கங்குவா' பட ப்ரோமோஷனில் சூர்யா!அப்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவை, நிகழ்ச்சி தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் என்று அடிக்கடி அழைத்துள்ளார். அதற்கு சூர்யா, “எங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் சார் மட்டுமே சூப்பர் ஸ்டார். எங்களால் அந்த பட்டத்தை கடன் வாங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ