Homeசெய்திகள்சினிமாதுபாயில் ரேஸ் காரில் பறந்த நடிகர் அஜித்குமார்... வீடியோ வைரல்...

துபாயில் ரேஸ் காரில் பறந்த நடிகர் அஜித்குமார்… வீடியோ வைரல்…

-

- Advertisement -
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அனிருத் இசை அமைக்கும் இத்திரைப்படத்தில் த்ரிஷா ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இது தவிர ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது பைக்கில் உலக சுற்றுலா செல்வதையும் நடிகர் அஜித் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு இடையே துபாய் சென்ற நடிகர் அஜித்குமார், சர்க்யூட்டில் ரேஸ் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அவரது மேலாளர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அஜித் 222 கி.மீ. வேகத்தில் ரேஸ் கார் ஓட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மின்னல் வேகத்தில் காரில் பறந்த அஜித்குமாரின் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ