Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக மாறும் நடிகர் மணிகண்டன்.... ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனராக மாறும் நடிகர் மணிகண்டன்…. ஹீரோ யார் தெரியுமா?

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் மணிகண்டன். இயக்குனராக மாறும் நடிகர் மணிகண்டன்.... ஹீரோ யார் தெரியுமா?அதை தொடர்ந்து இவர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தர தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் மணிகண்டன். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் நாளை (ஜனவரி 24) திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் மணிகண்டன், பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்திருக்கிறார். எனவே இவர் தற்போது இயக்குனராக மாற இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.இயக்குனராக மாறும் நடிகர் மணிகண்டன்.... ஹீரோ யார் தெரியுமா? இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், மணிகண்டன் இயக்கப் போகும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் மணிகண்டன் கதை சொல்லி இருப்பதாகவும் அந்த கதைக்கு விஜய் சேதுபதி ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ