spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்... நடிகர் நெப்போலியன் நிதியுதவி...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் நெப்போலியன் நிதியுதவி…

-

- Advertisement -
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்காக நடிகர் நெப்போலியன் நிதியுதவி அளித்துள்ளார்

பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது. இதற்கான நிதியை கோலிவுட்டின் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.

we-r-hiring
அந்த வகையில், முன்னதாக நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார். மேலும், கமல்ஹாசனும் நிதியுதவி வழங்கி இருக்கிறார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நிதியுதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளை தொடர்வதற்காக சொந்தவருமானத்திலிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் நெப்போலியனும் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறது. நிதியுதவி வழங்கிய நெப்போலியனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டடப் பணிகளை முடிக்க ரூ. 40 கோடி தேவைப்படுவதாக நடிகர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து, நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

MUST READ