புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர்… டீசர் வெளியானது…
- Advertisement -
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து உச்சம் தொட்டிருப்பவர்கள் ஏராளம். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியிலிருந்து ஏராளமானோர் வெள்ளித்திரைக்கு வந்த ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் சிவகார்த்திகேயன், சந்தான், டிடி உள்பட பலர் அடங்குவர். அந்த வகையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் மிகவும் பிரபலம் அடைந்தவர் புகழ். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சினிமாவிற்கு வர வாய்ப்பு கிடைத்தது

கடந்த 2019-ம் ஆண்டு வைபவ் நடித்த சிக்சர் படத்தின் மூலம் அவர் திரைத்துறைக்கு அறிமுகமாகினார். படத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பாார். அதனை தொடர்ந்து சந்தானம் நடித்த சபாபதி, அஜித்தின் வலிமை, அருண் விஜய் நடித்த யானை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார். கடந்த ஆண்டு வெளியான அயோத்தி படத்தில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் பெற்றார்.
இந்நிலையில், புகழ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிஸ்டர் ஜூ கீப்பர். ஜெ சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி முன்னோ