Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் இந்த செயலுக்கு விஜய் தான் காரணம்.... நடிகர் ஷாம் ஓபன் டாக்!

ரசிகர்களின் இந்த செயலுக்கு விஜய் தான் காரணம்…. நடிகர் ஷாம் ஓபன் டாக்!

-

- Advertisement -

நடிகர் ஷாம், விஜய் குறித்து பேசி உள்ளார்.ரசிகர்களின் இந்த செயலுக்கு விஜய் தான் காரணம்.... நடிகர் ஷாம் ஓபன் டாக்!நடிகர் ஷாம் தமிழ் சினிமாவில் 12பி, லேசா லேசா, இயற்கை போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது நடிப்பில் சமீபத்தில் அஸ்திரம் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர், வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களின் இந்த செயலுக்கு விஜய் தான் காரணம்.... நடிகர் ஷாம் ஓபன் டாக்!இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் ஷாம், விஜய் குறித்த ஒரு விஷயத்தை நடந்த போட்டியில் கூறியுள்ளார். அதாவது நடிகர் ஷாமிடம், தளபதி விஜய் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக இருக்கிறது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷாம், “அதாவது அண்ணன், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஷாம் இருக்கிற இடம் சந்தோஷமாக இருக்கும். என்னுடைய எனர்ஜி ஃபேக்டரே ஷாம் தான் என்று கூறியிருந்தார்.ரசிகர்களின் இந்த செயலுக்கு விஜய் தான் காரணம்.... நடிகர் ஷாம் ஓபன் டாக்! அப்பொழுதிலிருந்தே தமிழ்நாட்டில் என்னை எங்கு பார்த்தாலும் தளபதி ரசிகர்கள் அன்பாக இருப்பார்கள். இதை நான் அண்ணனிடம் போய் சொன்ன போது, அவங்க தான் டாப்பு, அவங்க தான் சூப்பர், டிராவல் பண்ணிக்கோன்னு சொல்வார்” என்று பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ