spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனுக்கு 12 லட்சத்தை திரும்ப வழங்கிய வருமான வரித்துறை

சிவகார்த்திகேயனுக்கு 12 லட்சத்தை திரும்ப வழங்கிய வருமான வரித்துறை

-

- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். எம். ராஜேஸ் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்து இருந்தார். படத்தில் நடித்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யப்பட்டது. வரிக்கு பணம் என்றே தயாரிப்பாளர் பிடித்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துள்ளார். ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட வரித்தொகையை, ஞானவேல் கட்டவில்லை. இதனால், நடிகர் சிவகார்த்திகேயனின் வங்கிக் கணக்கிலிருந்து வரித்தொகைக்காக 12 லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறை எடுத்துக் கொண்டது.

இதனை எதிர்த்து நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மிஸ்டர் லோக்கல் படத்திற்காக 15 கோடி சம்பளம் பேசினார்கள். எனது சம்பளத்தொகையில் வருமான வரியை ஞானவேல் ராஜா பிடித்தம் செய்தார். ஆனால், பிடித்தம் செய்த தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. இந்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிவகார்த்திகேயனுக்கு வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்ததால், வழக்கு முடிவுக்கு வந்தது.

MUST READ