Homeசெய்திகள்சினிமாஒரு பெண்ணால் 5 ஆண்கள் செய்யும் வேலையை செய்ய முடியும்.... நடிகர் சூர்யா!

ஒரு பெண்ணால் 5 ஆண்கள் செய்யும் வேலையை செய்ய முடியும்…. நடிகர் சூர்யா!

-

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு பெண்ணால் 5 ஆண்கள் செய்யும் வேலையை செய்ய முடியும்.... நடிகர் சூர்யா!அதேசமயம் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அகரம் பவுண்டேஷன் போன்ற தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நடைபெறும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் நடிகர் சூர்யா கலந்துகொள்ள வந்தார். ஒரு பெண்ணால் 5 ஆண்கள் செய்யும் வேலையை செய்ய முடியும்.... நடிகர் சூர்யா!அப்போது பேசிய சூர்யா, “பெண்கள் அங்கீகாரம் பெற ஆண்களை விட 50 சதவீதம் உழைக்க வேண்டிய உள்ளது. ஒரு பெண்ணால் ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை செய்ய முடியும். அவர்களை இன்னும் மேலே கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்” மேலும் பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்று பேசியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ