- Advertisement -
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் கோட் படக்குழுவினர், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தில் காண்பிக்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.