ராமர் கோயில் குறித்து கேள்வி… பதறி ஓடிய யோகிபாபு…
- Advertisement -
அயோத்தி ராமர் குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் நடிகர் யோகி பாபு தலைதெறித்து ஓடிய வீடியோ சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முகம் தெரியாமல் திரைக்கு அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றாக மாறி இருப்பவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் திரையின் ஏதோ ஒரு ஓரத்தில் அவரது முகம் தெரியும். பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயர் கிடைக்கவில்லை. இருப்பினும், தொடர் முயற்சியால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான யாமிருக்க பயமே என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

ஜினி, சிவகார்த்திகேயன், விஜய், ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக யோகி பாபு இல்லாத படங்களையே தற்போது காண முடியாது. நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் பெற்றார்.

தற்போது அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்கூல் என்ற புதிய படத்தின் பூஜையில் அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் மறுத்த யோகிபாபு, அங்கிருந்து பதறி ஓடினார்.