spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅரசியலில் களமிறங்கும் நடிகை அனுஷ்கா!

அரசியலில் களமிறங்கும் நடிகை அனுஷ்கா!

-

- Advertisement -

நடிகை அனுஷ்கா அரசியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.அரசியலில் களமிறங்கும் நடிகை அனுஷ்கா!நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் விஜய் உடன் இணைந்து வேட்டைக்காரன் படத்திலும் சூர்யாவுடன் இணைந்து சிங்கம் படத்திலும், அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த படங்களான அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பாகுபலி திரைப்படமும் அனுஷ்காவிற்கு நல்ல பெயரை அனுஷ்காவிற்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதன் பின் அனுஷ்கா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இருப்பினும் அனுஷ்காவுக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்து விட்டதால் அடுத்ததாக அரசியலில் களமிறங்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் நடிகை ரோஜாவுக்கு எதிராக நகரி தொகுதியில் போட்டியிட இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த தகவல் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் களமிறங்கும் நடிகை அனுஷ்கா!மேலும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அனுஷ்கா சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என்று சொல்லப்படுகிறது. எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ