நடிகை தேவயானி 1990 கால கட்டத்தில் இருந்து தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து கமல், விஜய், அஜித், விக்ரம், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தையும், ரசிகர்களையும் சேகரித்து வைத்தார். அதேசமயம் சின்ன திரையிலும் களமிறங்கி முத்திரை பதித்தார் தேவயானி. இதற்கிடையில் இவர், இயக்குனர் ராஜகுமாரனை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை தேவயானி, நடிகர் சந்தானம் தன்னுடைய கணவரை மோசமாக பேசியது தப்பு என கூறியுள்ளார்.
அதாவது நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன், சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ராஜகுமாரனை, சந்தானம் கலாய்க்கும் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இது குறித்து பேசிய தேவயானி, “என் கணவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார். அதில் என் கணவரை சந்தானம் மிக மோசமாக கலாய்த்து இருந்தார்.
சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை . எனக்கு அது பிடிக்கவும் இல்லை. என்னுடைய கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூட எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் அவர் சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்று தான் எனக்கு தெரியும். ஆனால் இது போன்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்று எனக்கு தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -