Homeசெய்திகள்சினிமாசினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு... நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்...

சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்…

-

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பு பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார். நடிகை என்றாலே காதல், கல்யாணம் உள்ளிட்ட கிசுகிசுக்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியுமா என்ன? கீர்த்தி சுரேஷும் அதற்கு விதிவிலக்கல்ல.

இடையில் கூட அனிருத்துடன் கீர்த்தி டேட்டிங் செய்து வருவதாக பல செய்திகள் வெளியாகி பின்னர் அதை மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தனது காதலர் குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதில் அளித்தார். அதில், “இந்த முறை எனது அருமையான நண்பர்களை நான் இதற்குள் இழுக்க வேண்டியதில்லை. எனது மர்மமான மனிதரை நான் விரைவில் வெளிப்படுத்துவேன். அதுவரை நான் மிகவும் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நான் ஒரு முறை கூட இதை சரியாக செய்யவில்லை.” என்று தெரிவித்தார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இப்படத்தில் அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பில் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது. இதையடுத்து, இந்தியிலும் அவர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன. இதனை விமரிசையாக கொண்டாடி வரும் கீர்த்தி சுரேஷ், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளார்.

MUST READ