- Advertisement -
குட்டி தாடி, குறுகிய உடல்வாகு, இப்படியான தோற்றத்தில் அறிமுகமாகி கடும் விமர்சனங்களை சந்தித்து, அவற்றை எதிர்த்து தற்போது இந்திய சினிமாவில் உச்ச நாயகனாக அடியெடுத்துள்ளவர் நடிகர் தனுஷ். கோலிவுட் திரையுலகின் தங்க மகனாக கொண்டாடப்படும் தனுஷ், தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் கொடி நாட்டிய தனுஷ் பாலிவுட் பக்கம் திரும்பினார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதையடுத்து, நடிகர் தனுஷ் பாலிவுட்டில் இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது தவிர ஹாலிவுட்டிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
Rashmika about #D51 💥 pic.twitter.com/WgL8V3Meln
— Venkatramanan (@VenkatRamanan_) January 18, 2024