spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை சாய் பல்லவி 'அன்னபூர்ணா தேவி' கோயிலில் சாமி தரிசனம்!

நடிகை சாய் பல்லவி ‘அன்னபூர்ணா தேவி’ கோயிலில் சாமி தரிசனம்!

-

- Advertisement -

நடிகை சாய் பல்லவி, அன்னபூர்ணா தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.நடிகை சாய் பல்லவி 'அன்னபூர்ணா தேவி' கோயிலில் சாமி தரிசனம்!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது அமரன் படத்தின் மூலம் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளார். இதற்கிடையில் இவர் தமிழில், தனுஷ் உடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டேல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சாய் பல்லவி. இந்நிலையில் தான் இவர் ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீ ராமனாக ரன்வீர் கபூர் நடிக்க ராவணனாக நடிகர் யாஷ் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி 'அன்னபூர்ணா தேவி' கோயிலில் சாமி தரிசனம்!இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டும் திரைக்கு வர இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி, ராமாயணா படத்தின் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் வாரணாசியில் உள்ள அன்னபூர்ணா தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ