spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉடல் ரீதியாக சவால்களை சந்தித்தேன்... நடிகை வேதிகா பேட்டி....

உடல் ரீதியாக சவால்களை சந்தித்தேன்… நடிகை வேதிகா பேட்டி….

-

- Advertisement -
kadalkanni
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அவர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சிம்பு நடித்த காளை படத்தில் நடித்தார். இருப்பினும் 2013-ம் ஆண்டு பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பினார் வேதிகா. இதைத் தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவியத் தொடங்கின 
அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த வேதிகா, நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார். பிறகு மீண்டும் லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நாயகியாக நடித்தார். மேலும், பாபி சிம்ஹா நடித்த ரஸாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பேட்ட ராப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், அவரது நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய தொடர் யாக்‌ஷினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், இந்த வெப் தொடருக்காக உடல் ரீதியாக பல சவால்களை சந்தித்ததாக நடிகை வேதிகா தெரிவித்துள்ளார். இந்த தொடரில், பல சவால்களான சண்டைக் காட்சிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ