- Advertisement -
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ள நிலையில், ஸ்டைலான புதிய தோற்றத்திற்கு மாறியிரு்ககும் சூர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கங்குவா. இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் படம் உருவாகி உள்ளது. மேலும், 25 மொழிகளில் படம் வௌியாகும் என்றும் கூறப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். 5டி தொழில் நுட்பத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.


இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியானது. அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் இரண்டாவது தோற்றமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக நடிகர் சூர்யா அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கங்குவா படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.



