Homeசெய்திகள்சினிமா'தளபதி 68' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அப்டேட்!

‘தளபதி 68’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அப்டேட்!

-

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏஜிஎஸ் நிறுவனமானது  பல வெற்றி படங்களை கொடுத்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேசன் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆவர்.

we-r-hiring

முதலில் இவர்கள் தயாரித்த படமான ‘திருட்டுப் பயலே’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தனது முதல் படமே தோல்வி படமாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அமைந்தது. இருப்பினும் மனம் தளராமல் தனது இரண்டாவது படமான சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் வெற்றியை கண்டனர். அதன்பிறகு மேலும் மேலும் படங்களை தயாரித்து தமிழ் திரைப்பட உலகில் தனது நிறுவனத்திற்கு ஒரு பெரும் பெயரை பதிவு செய்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் சந்தோஷ் சுப்பிரமணியம், அவன் இவன், மாற்றான், தனி ஒருவன், பிகில் மற்றும் லவ் டுடே திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. மேலும் ‘தளபதி 68’ படத்தை இந்த நிறுவனமே தயாரித்து வருகிறது. தளபதி படம் என்றாலே வசூல் வேட்டைக்கு பஞ்சமிருக்காது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் தரமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏஜிஎஸ் 24 குறித்து அப்டேட் தெரிவித்துள்ளனர். அந்த அப்டேட்டில் இன்று மதியம் 12 மணியளவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏஜிஎஸ் 24 பட டைட்டில் தெரிவிக்கப்படும் என கூறியிருக்கின்றனர். ஏற்கனவே தளபதி 68 படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தனி ஒருவன் 2 படத்தை தயாரிப்பதாக இருந்தது. எனவே இந்த அப்டேடிற்கு பிறகு ஏஜிஎஸ் 24 படம் தனி ஒருவன் 2 படமாக இருக்கலாம் என பலர் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

MUST READ