Homeசெய்திகள்சினிமாசைத்தான் படத்தின் போஸ்டர் ரிலீஸ்

சைத்தான் படத்தின் போஸ்டர் ரிலீஸ்

-

அன்று முதல் இன்று வரை மேடியாகவும், சாக்லேட் பாயாகவும் கொண்டாடப்படுபவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் ஆகிய திரைப்படங்கள் அவர் திரைக்கு வந்த தொடக்கத்திலேயே ஹிட் அடித்தன. ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வரும் மாதவன் தமிழ் மட்டுமன்றி பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் மாதவன் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனிடையே பாலிவுட்டில் மற்றொரு படத்தில் மாதவன் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதில், பிரபல தமிழ் நடிகை ஜோதிகாவும், பாலிவுட் பிரபலம் அஜய் தேவ்கனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோதிகா பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார். ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. விகாஸ் பாஹ்ல் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சைத்தான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ