spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்... வீடியோ வைரல்...

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்… வீடியோ வைரல்…

-

- Advertisement -
பிரபல நடிகர் அஜித்குமார் தன்னை செல்போனில் வீடியோ எடுத்ததை அழித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தை பொருத்தமட்டில் தனது படப்பிடிப்பு தளத்தில், தான் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அவர்களின் மனம் கலலை அடையாமல் இருக்க புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நபர். ஆனாலும், சமீபத்தில் தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் செல்போனை அவரிடம் இருந்து வாங்கி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு பின் அவரிடம் மீண்டும் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் தாரளமாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்றாலும் அதை தன்னுடைய அனுமதியின் பேரில் ஒரு வரைமுறைக்குட்பட்டே அனுமதிக்கிறார். அவருடைய அனுமதியின்றி இந்த வீடியோ எடுக்கப்பட்டதால் தான், அஜித் கோபமாகி இது போன்று அந்த செல்போனை வாங்கி வீடியோவை அழித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அஜித்தின் இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

MUST READ