நடிகர் அஜித் ஏகே 64 படம் குறித்து பேசியுள்ளார்.
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானது. அதில் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனை அடுத்து மீண்டும் அஜித்- ஆதிக் கூட்டணி இணையப்போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஏகே 64 படத்தின் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அஜித் தொடர் வெற்றிகளை கைப்பற்றி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாம் இடத்தை தட்டி தூக்கியது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் ஸ்பெயின் ப்ரெஸ்டிஜிஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்திலும் அஜித் குமாரின் அணி 3ஆம் இடத்தை பிடித்து பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
#AK64 Update from #Ajithkumar ⭐:
“The Script is Getting ready.. I’m bound by the contract, So I need to wait before we make the formal announcement..🤝” pic.twitter.com/cqXzBIeBib
— Laxmi Kanth (@iammoviebuff007) September 28, 2025

அதன்படி அவர், “ஏகே 64 படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறது. இதன் ஒப்பந்த விதிமுறைகளால் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக நான் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ஏகே 64 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.