Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் ஆதரவை பெற்ற 'அலங்கு' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

ரசிகர்களின் ஆதரவை பெற்ற ‘அலங்கு’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

-

- Advertisement -

ரசிகர்களின் ஆதரவை பெற்ற அலங்கு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.ரசிகர்களின் ஆதரவை பெற்ற 'அலங்கு' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் தயாரிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தான் அலங்கு. இந்த படத்தை பயணிகள் கவனிக்கவும் , உறுமீன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான எஸ்.பி. சக்திவேல் இயக்கியிருந்தார். இதில் அறிமுக நடிகர் குணாநிதி நடிக்க அவருடன் இணைந்து செம்பன் வினோத், காளி வெங்கட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அஜஷ் இசையமைக்க எஸ். பாண்டி குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படமானது மனிதனுக்கும் செல்லப்பிராணியான நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதை உரக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.ரசிகர்களின் ஆதரவை பெற்ற 'அலங்கு' திரைப்படம் ஓடிடியில் வெளியானது! இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை வாழ்த்திய நிலையில் இதன் ட்ரைலரை பார்த்து நடிகர் விஜயும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் இப்படம் இன்று (ஜனவரி 17) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ