நடிகர் தனுஷ் தமிழ் திரை உலகின் முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தனுஷ் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதேசமயம் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார்.கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பா. பாண்டி திரைப்படத்திலும் தனுஷ் இயக்கி நடித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனுஷின் 50வது படத்தில் விஷ்ணு விஷால், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் தனுஷிற்கு எஸ் ஜே சூர்யா அண்ணனாகவும், சந்திப் கிஷன் தம்பியாகவும், துஷாரா விஜயன் தங்கையாகவும் நடிக்க இருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தனுஷ் உடன் ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்த அமலாபால் இந்த படத்தில் இணைய இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.