ஜூனியர் என்டிஆரின் தேவரா… அனிருத் பாடிய பாடல் ரிலீஸ்…
- Advertisement -
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவரா திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

2024-ம் ஆண்டு தசரா பண்டிகையின் போது, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்திற்கு தேவரா முதல் பாகம் என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். சுமார் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி தேவரா படத்திற்காக இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் மேலும், சாயிஃப் அலிகான் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேவரா படத்திலிருந்து படக்குழு முதல் பாடலை வெளியிட்டு உள்ளது. பியர் சாங் என்ற பாடலை, விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தேவரா படத்தின் முதல் பாகம் வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.