இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.தமிழ் சினிமாவில் இசை என்றாலே முதலில் தம் நினைவுக்கு வருவது இளையராஜா தான். இந்த வகையில் இசைஞானி என்று கோடான கோடி ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை அன்புடன் அழைக்கப்படுபவர் இளையராஜா. இவர் திரைத்துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். அதாவது இவருடைய இசை 80ஸ், 90ஸ், 2கே என மூன்று தலைமுறையினர்களையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜாவும் கலைமீது கொண்ட அதீத காதலினால் 82 வயதிலும் பல மகத்துவமான சாதனைகளையும் படைத்து வருகிறார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலியண்ட் என்ற பெயரில் லண்டனுக்கு சென்று சிம்பொனி இசையை அரங்கேற்றினார்.
இவ்வாறு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த இளையராஜாவை அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். நிலையில் தான் வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- Advertisement -