Homeசெய்திகள்சினிமா56 வயதில் இரண்டாவது திருமணம்... சல்மான்கானின் வீட்டில் விசேஷம்..

56 வயதில் இரண்டாவது திருமணம்… சல்மான்கானின் வீட்டில் விசேஷம்..

-

நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான், தனது 56 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். இவரது சகோதரரும் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் தனது 56-வது வயதில் இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த டிசம்பர் 24-ம் தேதி இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிந்துத. பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர் நடிகை மலைக்கா அரோராவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, பின்னர் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மலைகா அரோரா மற்றும் அர்பாஸ் கானுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்களை பகிர்ந்த இருவரும், எங்களுக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையில், நாங்கள் என்றென்றும் காதலிக்கத் தயாராகி விட்டோம். உங்கள் ஆசி தேவை என குறிப்பிட்டுள்ளார். ஷுரா கான் ஒரு செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

MUST READ