spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதல என்பது பவர்ஃபுல்லான வார்த்தை..... அருண் விஜய் நெகிழ்ச்சி!

தல என்பது பவர்ஃபுல்லான வார்த்தை….. அருண் விஜய் நெகிழ்ச்சி!

-

- Advertisement -

நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அருண் விஜய் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன்படி அருண் விஜயின் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனின் மான் கராத்தே பட இயக்குனர் திருக்குமரன் இயக்குகிறார். இந்த படத்தை பிடிஎஸ் யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி அத்னானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தல என்பது பவர்ஃபுல்லான வார்த்தை..... அருண் விஜய் நெகிழ்ச்சி!தடம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதன்படி அருண் விஜயின் 36-வது படமான இந்த படத்திற்கு ரெட்ட தல என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்ட தல என்ற தலைப்பானது, ஏ ஆர் முருகதாஸ் அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருந்தாராம். அந்தப் படத்திற்கு தான் இந்த தலைப்பை வைத்திருந்தாராம். ஆனால் அந்த படம் தொடங்கப்படாமலேயே கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.தல என்பது பவர்ஃபுல்லான வார்த்தை..... அருண் விஜய் நெகிழ்ச்சி! இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய உதவியாளர் திருக்குமரனுக்கு அந்த தலைப்பை கொடுத்து விட்டதாக அருண் விஜய் ஏ ஆர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “தல என்பது தமிழ்நாட்டில் பவர்ஃ புல்லான வார்த்தை” என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

MUST READ