தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி…
- Advertisement -
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சுமார் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார்.

பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது. இதற்கான நிதியை கோலிவுட்டின் நடிகர்கள், நடிகைகள்உள்ளிட்ட வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சங்கத்தின் உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்தவருமானத்திலிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் இந்த காசோலையை வழங்கினார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் நன்றி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார். மேலும், கமல்ஹாசனும் நிதியுதவி வழங்கி இருக்கிறார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், நடிகர் சங்கத்திற்கு மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பெயர் வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.