Homeசெய்திகள்சினிமாவணங்கான் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

வணங்கான் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

-

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மிஷன் சாப்டர் 1. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் அருண் விஜய், பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வணங்கான் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே சமயம் இந்த படம் 2024 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக அருண் விஜய், 2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே பட இயக்குனர் திருக்குமரனுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் திருக்குமரன், மான் கராத்தே படம் மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கெத்து திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்தபடியாக அருண் விஜய் இயக்கப் போகிறார் திருக்குமரன். வணங்கான் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜை அடுத்த வாரம் நடைபெற இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ