spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி நடிக்கும் 'அரிசி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.....போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரம்!

சமுத்திரக்கனி நடிக்கும் ‘அரிசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…..போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரம்!

-

- Advertisement -

சமுத்திரக்கனி திரைத்துறையில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் திரு மாணிக்கம், யாவரும் வல்லவரே போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.சமுத்திரக்கனி நடிக்கும் 'அரிசி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.....போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரம்!

இதற்கிடையில் சமுத்திரக்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ரா. முத்தரசன் உடன் இணைந்து அரிசி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சுப்பிரமணியம் சிவா, பிக் பாஸ் தாமரை, மகிமை ராஜ், சிசர் மனோகர், மாஸ்டர் ஹரி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ் ஏ விஜயகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க மோனிகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஜான்சன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.சமுத்திரக்கனி நடிக்கும் 'அரிசி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.....போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரம்! இன்றைய சமூகத்தில் நம் அன்றாட தேவையான உணவிற்குப் பின் இருக்கும் அரசியல் குறித்து பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ