Homeசெய்திகள்சினிமாநண்பேண்டா..... ஆர்யா, சந்தானம் காம்போவின் பாஸ் என்கிற பாஸ்கரன் 2.... ஷூட்டிங் எப்போது?

நண்பேண்டா….. ஆர்யா, சந்தானம் காம்போவின் பாஸ் என்கிற பாஸ்கரன் 2…. ஷூட்டிங் எப்போது?

-

பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா, சந்தானம், நயன்தாரா காம்போவில் வெளியான திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க காமெடி கலந்த கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. இன்றளவும் கூட இளைஞர்களின் பேவரைட் படமாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து ஆர்யா சந்தானம் கூட்டணியில் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ,ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்களும்  நல்ல வரவேற்பை பெற்றது.

அதனால் தற்போது 13 வருடங்கள் கழித்து ஆர்யா, சந்தானம் நடிப்பில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அதன்படி பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலும் எம் ராஜேஷ் இயக்க இருக்கும் இந்த படத்தின்
படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ