Homeசெய்திகள்சினிமா60 வயதில் இளம் பெண்ணை மறுமணம் செய்துகொண்ட பிரபல வில்லன் நடிகர்!

60 வயதில் இளம் பெண்ணை மறுமணம் செய்துகொண்ட பிரபல வில்லன் நடிகர்!

-

- Advertisement -

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார்.

we-r-hiring

தமிழில் தில்,பாபா, பகவதி, தமிழன், ஏழுமலை, ஆறு. என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி நடிகை, பாடகி என பன்முகத்திறமை கொண்ட ரஜோஷி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் நடிகை சகுந்தலாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் 60 வயது ஆன ஆஷிஷ் வித்யார்த்தி அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரைத் தற்போது திடீரென இன்று மறுமணம் செய்துள்ளார்.

இவர்கள் திருமணம் நெருங்கிய வட்டாரத்தினர் உடன் கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆஷிஷ் 60 வயதில் திருமணம் செய்துகொண்டுள்ளது சினிமா வட்டாரம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

MUST READ