Homeசெய்திகள்சினிமாதி ஆர்ச்சிஸ் திரைப்பட விழாவில் அட்லீ - பிரியா தம்பதி

தி ஆர்ச்சிஸ் திரைப்பட விழாவில் அட்லீ – பிரியா தம்பதி

-

- Advertisement -

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தி ஆர்ச்சிஸ் திரைப்பட நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியினர் கலந்து கொண்டனர்.

பாலிவுட்டில் ஜோயா அக்தரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி ஆர்ச்சீஸ். அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளனர். இதில் மிஹிர் அஹுஜா, வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா மற்றும் அதிதி சைகல் ஆகியோரும் நடித்துள்ளனர். நாளை இத்திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்களும் வந்திருந்தனர். ஷாருக்கான், அஜய் தேவ்கன், ஆதித்யா கபூர், கஜோல், குஷி கபூர், சுஹானா கான், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் உள்பட பல முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்தி இயக்குநர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியினரும் கலந்து கொண்டனர். ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் நடைபெறும் அனைத்து விதமான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளிலும் அட்லி – பிரியா தம்பதி கலந்து கொள்கின்றனர். அண்மையில் அம்பானி வீட்டு நிகழ்ச்சியிலும் அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ