அயோத்தி நடிகை கவின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தன்பால் ஈர்த்து வரும் இளம் நடிகராக கவின் திகழ்ந்து வருகிறார். கவின் நடிப்பில் வெளியாகி வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடைசியாக கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை அடுத்து கவின் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது அயோத்தி நடிகை ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் கவினுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் முழுக்க ப்ரீத்தி தான் தன் நடிப்பின் மூலம் தோளில் தாங்கிச் சென்று பார்வையாளர்களுக்கும் அதே உணர்வைக் கடத்தினார். அயோத்தி படத்தில் நடிகை ப்ரீத்தியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.