spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'...... ரிலீஸ் எப்போது?

பாலா, அருண் விஜய் கூட்டணியின் ‘வணங்கான்’…… ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வணங்கான். இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ஆர் பி குருதேவ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'...... ரிலீஸ் எப்போது?இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து மிஸ்கின், சமுத்திரக்கனி, ரோஷினி பிரகாஷ், பிருந்தா சாரதி, சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். இதன் மூலம் இந்த படத்தில் அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் நடித்திருப்பது தெரிய வந்தது. இயக்குனர் பாலாவின் படங்கள் பெரும்பாலும் தனித்துவமாக இருக்கும். பாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'...... ரிலீஸ் எப்போது?அதன்படி பாலா, வணங்கான் படத்திலும் நல்ல கன்டென்டை வைத்திருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2024 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் அனைவரும் தேதியை அறிவித்த பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ