நடிகர் அஜித், துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார்.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜர்பைஜானில் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அஜர்பைஜானில் காலநிலை மாற்றத்தால் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே படக்குழுவினர் வேறொரு லொகேஷனை தேடி வருகின்றனராம். இருப்பினும் நீண்ட நாட்களாக படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதனால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு மே மாதம் வரை இழுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின்றன. விடாமுயற்சி படமானது ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட வேண்டியது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் மிகவும் தாமதமாகவே தொடங்கப்பட்டது.
இதற்கிடையில் ரசிகர்கள், விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே சமயம் விடாமுயற்சி திரைப்படமானது மே மாதம் 1 ஆம் தேதி, அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் எனவும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பே மே மாதத்தில் தான் முடிவடையும் என்ற தகவல் ரசிகர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


