இயக்குனர் மிஷ்கின் நடிகை திரிஷா குறித்து பேசி உள்ளார்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அந்த வகையில் திரிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி கடைசியாக விஜயின் லியோ மற்றும் தி ரோட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வம்பரா, டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, நடிகை திரிஷாவின் கூவத்தூர் விவகாரத்தில் தொடர்புபடுத்தி அவதூறாக பேசியிருந்தார். இந்த தகவல் பலரையும் முகம் சுளிக்க வைத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஏ.வி. ராஜுவிற்கு திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா, ஏ.வி. ராஜுவிற்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.
இச்சமயத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் சமீபத்தில் நடந்த பேட்டியில், “பெண்களை அவமதிப்பவர்கள் ஆண்களே கிடையாது. ஒரு நடிகை குறித்து சுலபமாக எது வேண்டுமானாலும் பேசி விடுகிறார்கள். நான் த்ரிஷாவை இரண்டு முறை தான் சந்தித்திருக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர். ஒரு நடிகையை காதலியாக நினைத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.