நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு தனது 26 ஆவது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் தனது 27 வது படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக கார்த்தி 27 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா ஸ்வாதி கொண்டே ராஜ்கிரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது. அதே சமயம் இப்படம் இரட்டை கதாநாயகர்களின் சப்ஜெக்ட் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்திற்கு மெய்யழகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
Here’s a special celebration! A start to the finale 🎆
Presenting you our #Production22 #Karthi27 ✨@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash @ActorSarann #GovindVasantha #MahendiranJayaraju #Rajeevan @R_Govindaraj… pic.twitter.com/exrOc2P9up
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 24, 2024
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோவில் படத்தின் பூஜை நிகழ்ச்சிகளும் காட்டப்படுகிறது. வீடியோவின் இறுதியில் படப்பிடிப்பு 100% முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.