கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். விஜயின் 65 ஆவது படமான இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். விஜய்க்கு தரமான கதையை தயார் செய்ய வில்லை என நெல்சனை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். இருந்தபோதிலும் இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாக நெல்சன் திலிப் குமார் பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் கூறுகிறது. விஜய், லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தளபதி 68 படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன், தனது அடுத்த படத்தையும் இயக்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே விஜயின் அடுத்த படமும் – நெல்சனின் அடுத்த படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜயின் 69வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கப் போகிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..