தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து போலா சங்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.அதேசமயம் பிரபல நடிகை ராதிகா ஆப்தே தமிழ், இந்தி,மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து மெரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கின்றனர். அக்கா என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை அறிமுக இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த வெப் தொடர் உருவாகிறது. இந்த அக்கா எனும் வெப் சீரிஸ் திரில்லர் ஜானரிலும், கடுமையான பழிவாங்கும் கதையம்சம் கொண்டவையாகவும் உருவாகிறது. மேலும் இந்த தொடர் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஏற்கனவே தி ரயில்வே மென் என்ற வெத்தொடரை தயாரித்திருந்தது என்பதும் அந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.