spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபருத்திவீரன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?.....போட்டுடைத்த அமீர்!

பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?…..போட்டுடைத்த அமீர்!

-

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார். இருவரும் அந்த அளவுக்கு பரீட்சையமில்லாத முகங்களாக இருந்தாலும் பருத்திவீரன், முத்தழகாகவே வாழ்ந்திருப்பார்கள்.மேலும் இவர்களுடன் சரவணன்(செவ்வாழை) பொன்வண்ணன், கஞ்சா கருப்பு(டக்ளஸ்), பொணம்தின்னி, குட்டிச்சாக்கு என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றளவும் நம் எண்ண ஓட்டங்களில் இருந்து மறையவில்லை. பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?.....போட்டுடைத்த அமீர்!அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது இப்படம். முதல் படமே கார்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. யுவன் சங்கர் ராஜாவின் உயிரோட்டமான இசை இன்றளவும் நம் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு எதிர்ப்பாராத ஒரு கிளைமாக்ஸ் அதிர்ச்சியை கொடுத்தது. கனத்த இதயத்தோடும் கண்ணீர் குளமான கண்களோடும் திரையரங்குகளில் இருந்து வெளிவந்த கூட்டத்தை ரசிகர்களால் மறக்கவே முடியாது. கிளைமாக்ஸ் காட்சிகளும் கார்த்தி, பிரியாமணி இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். குறிப்பாக கார்த்தியின் நடிப்பு அவ்வளவு எதார்த்தமானதாக இருக்கும். பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?.....போட்டுடைத்த அமீர்!இவ்வளவு பெயரைப் பெற்றுக் கொடுத்த அந்த பருத்திவீரன் கதாபாத்திரத்திற்கு முதலில் அமீர், கார்த்தியை தேர்வு செய்யவில்லை என்றும், அக்கதாபாத்திரத்துக்கு முன்னதாக அமீர் தேர்வு செய்தது நடிகர் சூர்யாவை தான் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சூர்யா நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் எந்த மாதிரி இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்ய தோணவில்லை. ஏனெனில் கார்த்தியை தவிர அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்ப்பது கடினம். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த கதாபாத்திரத்தை பற்றி நாம் பேசிக் கொண்டிருப்பதே பருத்திவீரனின் தாக்கம் தான்.

MUST READ