Homeசெய்திகள்சினிமாபறவைக்காக கரண்ட் இல்லாமல் வாழ்ந்த ஊர்… நெகிழ வைக்கும் கதையில் இணைந்த பிக்பாஸ் கதிரவன்!

பறவைக்காக கரண்ட் இல்லாமல் வாழ்ந்த ஊர்… நெகிழ வைக்கும் கதையில் இணைந்த பிக்பாஸ் கதிரவன்!

-

- Advertisement -

பிக்பாஸ் கதிரவன் ‘கூடு’ என்ற படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 6-ல் பங்கேற்ற பிறகு புகழ் பெற்ற வீஜே கதிரவன், கூடு என்ற படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாயல் விஜய் இயக்குகிறார்.

we-r-hiring

கிராமத்தில் உள்ள ஈபி பெட்டியில் குருவி கூடு கட்டியதால் 35 நாட்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது கூடு திரைப்படம். முட்டைகள் பொரிந்து சிட்டுக்குருவிகள் பறந்து செல்லும் வரை அந்த ஊர்க்காரர்கள் காத்திருந்த சம்பவம் கேட்கும் அனைவர்க்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கதை தான் படமாக உருவாகியுள்ளது.

ஸ்கை மூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் எம் கணேஷ் மற்றும் கண்ணன் பி ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்திற்கு டேவிட் வில்லியம்ஸ் திரைக்கதை எழுதியுள்ளார். கூடு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

MUST READ