spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதான்டா பெஸ்ட் ஓப்பனிங் ஷாட்... வெற்றிமாறனை கொண்டாடும் அனுராக் காஷ்யப்!

இதான்டா பெஸ்ட் ஓப்பனிங் ஷாட்… வெற்றிமாறனை கொண்டாடும் அனுராக் காஷ்யப்!

-

- Advertisement -

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘விடுதலை’ படத்தை புகழ்ந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடுதலை‘ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. வசூலிலும் இந்தப் படம் பல சாதனைகளை படைத்து வருகிறது.

we-r-hiring
Viduthalai
Viduthalai Shoot

படத்தில் நடித்த அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வெற்றிமாறன் தனது முதல் படம் போலவே இந்தப் படத்திலும் உனது முழு உழைப்பை கொட்டி படத்தை செதுக்கியிருக்கிறார். பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘விடுதலை’ படத்தை பார்த்து புகழ்ந்துள்ளார்.

anurag speaking
anurag speaking

“விடுதலை மிகவும் சக்தி வாய்ந்த படம். நடிகர் அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். நான் கடந்த சில ஆண்டுகளில் பார்த்த சிறந்த ஓப்பனின்ங் ஷாட். இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்.

வெற்றிமாறன் எப்போதும் சிறந்த இயக்குனர்.” என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறனின் படங்கள் வெளிவந்தாலே அதனை உடனடியாக பார்த்துவிட்டு அதற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார் அனுராக் காஷ்யப். மொழி கடந்து படைப்பாளர்கள் மற்ற படைப்பாளியின் படைப்பை மனமுவந்து பாராட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

MUST READ