- Advertisement -  
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அதற்கான திருமண கொண்டாட்டங்கள் கோலோச்சி உள்ளன. 
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் எப்படி எங்கு நடக்கப்போகிறது என்பது தான் ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு நிச்சயம் நடைபெற்று முடிந்தது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது.

இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் 3 நாட்களுக்கு நடைபெற்றன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டில், தொடங்கி பாலிவுட் வரை அனைத்து டாப் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். சினிமா மட்டுமன்றி விளையாட்டு, டெக்னாலஜி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களும் இதில் பங்கேற்றனர்.





