Homeசெய்திகள்சினிமா'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

-

- Advertisement -

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வைபவ். இவர் ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் பெருசு திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் வைபவ் உடன் இணைந்து அதுல்யா ரவி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்கள், டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தில் இருந்து ஓ மெரி ஜான் எனும் வீடியோ பாடல் வெளியாகியிருக்கிறது.

MUST READ