Homeசெய்திகள்சினிமாமீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சேரன்... கதாநாயகன் ஆகும் கன்னட ஸ்டார் நடிகர்!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சேரன்… கதாநாயகன் ஆகும் கன்னட ஸ்டார் நடிகர்!

-

இயக்குனர் சேரன் பிரபல கன்னட நடிகரை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவல் மக்கள் கொண்டாடும் கிளாசிக் படங்கள் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் தற்போதும் எவர்க்ரீன் படங்களாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இயக்குனர் ஆக இருந்த சேரன் பின்னர் நடிகராக சில படங்களில் நடித்தார். சினிமாவுக்கு சற்று காலம் முழுக்கு போட்டிருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் சேரன் மீண்டும் இயக்குனராக களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சேரன் இயக்க இருக்கும் புதிய படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சுதீப் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுதீப் மீண்டும் தமிழுக்கு வர ஆயத்தமாகியுள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்திலும் சுதீப் புதிய படத்தில் சுதீப் நடிக்க இருக்கிறாராம். இந்தக் கூட்டணியில் ஏற்கனவே ‘முடிஞ்சா இவன புடி’ என்ற திரைப்படம் வெளியானது.

MUST READ