spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் சட்னி சாம்பார்... வெப் தொடரின் முதல் தோற்றம் ரிலீஸ்....

யோகி பாபு நடிக்கும் சட்னி சாம்பார்… வெப் தொடரின் முதல் தோற்றம் ரிலீஸ்….

-

- Advertisement -
kadalkanni
 
சுருட்டை முடி, பருத்த உடல், என தனது தோற்றத்தை தாண்டி தன் நடிப்பால் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் சிரிக்க வைத்த பெருமை நடிகர் யோகி பாபுவுக்கு உண்டு. தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு, ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மண்டேலா மற்றும் தர்மபிரபு படங்களுக்கு பிறகு அவர் அடுத்தடுத்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் பூமர் அங்கிள், மிஸ்மேகி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இறுதியாக மலையாளத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து வானவன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து மது வினீஸ் இயக்கத்தில் ஜோரா கைய தட்டுங்க என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சட்னி சாம்பர் என்ற வெப் தொடரில் யோகி பாபு நடித்து வருகிறார். அதில் அவருடன் வாணி போஜன், கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகி இருக்கும் சட்னி சாம்பார், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் தோற்றம் தற்போது வௌியாகி உள்ளது.

MUST READ